முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (25/12/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதைசெலுத்தினர்.