Advertisment

"பழங்குடி சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" - குடியரசு தலைவர்

president murmu talks about pride tribal women jharkhand meeting

Advertisment

பழங்குடி சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று முன்தினம்ஜார்கண்ட் சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்றுமுன்தினம் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில் இன்று மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு பெண்ணாக இருப்பதோ, பழங்குடி சமூகத்தில் பிறப்பதோ மோசமான விஷயம் இல்லை. என் கதை அனைவருக்கும் தெரியும். நான் பழங்குடி சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

jharkand President
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe