/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pppp_1.jpg)
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று (13/11/2021) தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கிச் சுடுதல் அவனி, தடகள வீரர் சுமித், பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா, துப்பாக்கிச் சுடுதல் வீரர் மணீஷ் நர்வால், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அதேபோல், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா உள்ளிட்ட 33 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. மேலும், பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)