Advertisment

அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர்!

President Draupadi Murmu to go to Ayodhya Ram temple

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

Advertisment

அப்போது நடைபெற்ற சிறப்புப் பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisment

ராமர் கோவில் திறப்புக்கு பல்வேறு பிரபலங்கள், சினிமா நடிகர் நடிகை என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் கோவில் திறக்கப்பட்டு 4 மாதங்கள் கழித்து இன்று அயோத்திக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செல்லவுள்ளார். அங்கு ராமர் கோயில், அனுமான் கர்ஹி கோயில்களில் வழிபாடு செய்ய உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Ayothi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe