Advertisment

ஆளுநர்களுடன் நாளை குடியரசுத்தலைவர் ஆலோசனை !

மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (03/04/2020) ஆலோசனை செய்கிறார்.மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்களிடம் குடியரசுத்தலைவர் கேட்டறிகிறார்.காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

Advertisment

PRESIDENT DISCUSSION WITH GOVERNORS TOMORROW CORONAVIRUS PREVENTION

ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று (02/04/2020) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus discussion GOVERNORS president ram nath kovind prevention
இதையும் படியுங்கள்
Subscribe