உத்திரபிரதேச மாநிலத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடியிருக்கும் அரசு பங்களாக்களில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மின்கட்டணம் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்காரணமாக விரைவில் அரசு பங்களாக்களில் ப்ரீபெய்ட் மீட்டர் பொறுத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்தரபிரதேச மாநில மின்சாரத்துறை அமைச்சரான ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், ‘‘வரும் நவம்பர் 15 முதல் இந்த பிரீபெய்டு மீட்டர்களை பொருத்த உள்ளோம். இதன்மூலம், பயன்படுத்துவோரும் தன் பிரீபெய்டு மீட்டரை பார்த்து மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்ய முடியும். இதற்காக ஒரு லட்சம் மீட்டர்களை அரசு வாங்கியுள்ளது’’ எனத் தெரிவித்தார்.