Advertisment

சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரேம்சிங் தமாங்!

Prem Singh Tamang forms the government again in the state of Sikkim

Advertisment

நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இந்த தேர்தல் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. 32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் தற்போதைய வாக்குஎண்ணிக்கை நிலவரப்படி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 29 தொகுதிகளிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. சிக்கிம் மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 17 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தற்போதைய முன்னிலை நிலவரப்படி மீண்டும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

elections sikkim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe