Advertisment

குப்பைகளுக்கு நடுவே குழந்தை பெற்ற பெண்; அரசு மருத்துவமனையில் அவலம்...

ytjdj

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மருத்துவ குப்பை குவியலுக்கு மத்தியில் பெண்ணுக்கு பிரசவம் நடந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உதிர்ப்பிரதேசத்தின் கொன்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்நிலையில், பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லாததால், அவருடன் இருந்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். தனியறை ஒதுக்கப்படாமல் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, மருத்துவர் இல்லாததால், அந்த இடத்திலேயேசுற்றியிருந்த பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய அம்மாநில மருத்துவ துறை செயலாளர், ' இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்படுவர்' என கூறினார்.

Advertisment

uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe