/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi_0.jpg)
டெல்லியில் எட்டுமாத கர்ப்பிணி, தனது கணவரை முத்தமிடும்போது அவரது நாக்கை கடித்து துண்டாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லியிலுள்ள ரஹோலா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், தனது கணவர்(கரண்) அழகாக இல்லை என்ற மனவேதனையில் இந்த 22 வயது கர்ப்பிணி பெண்(காஜல்) இருந்ததாக காவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸ், “ இந்த தம்பதியினர் இருவரும் தினசரி சண்டையிட்டுக்கொண்டே இருந்ததாகவும், எதாவது மன வேதனை இவ்விருவர்களுக்கும் இருந்திருக்கிறது”. மேலும், அந்த கணவர் பெயிண்டிங் வேலை செய்பவர்” என்று கூறியுகின்றனர்.
இச்சம்பவம் நடந்த அன்று, இந்த தம்பதியினர் கடும் வாக்குவாதத்தில் இருந்து, பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது கணவரை முத்தமிட்ட காஜல், கரணின் நாக்கை துண்டாக்கும் அளவிற்கு கடித்துள்ளார் என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சப்தர்ஜுங் மருத்துவமனையில் கரண் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இனி இவரால் பேசிய முடியுமா என்பது சந்தேகம் என்று சொல்லிவிட்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் எட்டுமாத கர்ப்பிணியாக இருந்த காஜல், தற்போது போலிஸாரால், ஐபிசி 325 பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணமானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)