Advertisment

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... சாமியார் மிர்ச்சி பாபா கைது!

Preacher Mirchi Baba arrested!

பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த பிரபல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் மிர்ச்சி பாபா. அதுவரை வெறும் சாமியாராக இருந்த அவர் அரசியல் சாமியாராக மாறினார். இந்நிலையில் சம்பவத்தன்று மிர்ச்சி பாபாவிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி கேட்டு வந்துள்ளார். மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமாக கொடுத்த மிர்ச்சி பாபா சாமியார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் சாமியார் மிரட்டி உள்ளார். ஆனாலும் அந்த பெண் துணிந்து போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து மிர்ச்சி பாபாவை பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைதுசெய்தனர்.

Advertisment

incident MadhyaPradesh arrest police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe