ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு கொள்வதும் திருமணம் செய்வதும் சட்டப்பிரிவு 377-ன் படி இந்தியாவில் தண்டனைக்குரிய செயலாக இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்புவழங்கியது. அதனைத்தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள். அதற்காக திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் ப்ரீ வெட்டிங் ஷூட்டில் இருவரும் ஏராளமான புகைப்படங்களை எடுத்து கொண்டார்கள். இதனிடையே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.