Skip to main content

செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா மீது தாக்குதல்; யூடியூப் பெண் பிரபலம் உட்பட 8 பேர் கைது

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

nn

 

அண்மையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், செல்போனை வாங்கி பின்னோக்கி எரிந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தாக்கப்படுவது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

 

மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது நண்பருடன் இருந்த பொழுது யூடியூப் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவரும் ஆணும் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டு அவரை அணுகியுள்ளனர். ஆனால், பிரித்வி ஷா செல்ஃபி எடுக்க மறுத்துள்ளார். தொடர்ந்து பலமுறை கேட்டும் அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அவர்களை வெளியேற்றுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த யூடியூப் பிரபலம் ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டார்.

 

பின்னர் வெளியே வந்த பிரித்வி ஷாவை சப்னா கில் என்ற அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக சப்னா கில் உட்பட 8 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்பி எடுக்க முயன்று விபரீதம்; சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Tragedy trying to take a selfie; One killed after being attacked by a lion

அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும்  விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; முன்னாள் கிரிக்கெட் கேப்டனை களமிறங்கிய காங்கிரஸ்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

 Mohammad Azharuddin contest Telangana election on behalf of Congress

 

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம்(நவம்பர் 30) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக மற்றும், சந்திரகேசர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி  ஆகிய கட்சிகள் படு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன . தெலுங்கானா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு ஆகவே ஆகாது என்று கூறி வந்தாலும்,  பாஜகவின் பி டீம் டி.ஆர்.எஸ் கட்சி என்று பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியெங்கும் கூறி வருகிறது காங்கிரஸ். 

 

இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில்  காங்கிரஸ் பெற்ற வெற்றி தெலுங்கானா காங்கிரசார்களிடையே பலத்த உற்சாகத்தையும் அளித்துள்ளது. அதே உற்சாகத்துடன் தெலுங்கான தேர்தலில் வெல்ல வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் முதற்கட்டமாக 55 வேட்பாளர்கள் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்ட நிலையில் நேற்று 45 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

 

அதில், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடக் காங்கிரஸ் தலைமை முகமது அசாருதீனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை தமக்கு வழங்கியதற்காக முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சித் தலைவர், மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.