Advertisment

“பிரதமரின் கால்களில் விழுந்து அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்” - நிதிஷ்குமாரைச் சாடிய பிரஷாந்த் கிஷோர்

Prashant Kishore slams Nitish Kumar

Advertisment

பீகார் மாநிலம், பாகல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் வியூக கணிப்பாளரான பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “கடந்த காலத்தில் நிதிஷ்குமாருடன் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சியைவிற்பனைக்கு வைக்கவில்லை.

ஒரு மாநிலத்தின் தலைவர் என்பது அதன் மக்களின் பெருமை. ஆனால், பிரதமர் மோடியின் பாதங்களில் விழுந்து பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள்.

ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்திற்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை. 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பா.ஜ.க ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத்தொடுகிறார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe