Advertisment

அதேபோன்ற பாதிப்பு மீண்டும் மக்களுக்கு ஏற்படும்... எச்சரிக்கும் பிரசாந்த் கிஷோர்...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.

Advertisment

prashant kishor about nrc

இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை பிரசாந்த்கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சமமானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளும் நலிந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த அனுபவம் நமக்குத் தெரியும். அதேபோன்ற பாதிப்பு தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால் மக்களுக்கு ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

citizenship amendment bill nrc list Prashant Kishor
இதையும் படியுங்கள்
Subscribe