Advertisment

"இன்னும் சில ஆண்டுகள் பொறுத்துக்கொள்ள வேண்டும்..." -பிரசாந்த் கிஷோர்

prashant kishor about bjp win in bihar

Advertisment

சோர்வடைந்த, அரசியல் ரீதியாக இகழத்தக்கவரான ஒருவரின் ஆட்சியை பீகார் மக்கள் இன்னும் சில ஆண்டுகள் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும், இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இந்நிலையில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிதிஷ்குமாருக்கான வாழ்த்து பதிவில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில், "பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள். முதல்வராக சோர்வடைந்த மற்றும் அரசியல் ரீதியாக இகழத்தக்க ஒருவரை முதல்வராக பெற்றுள்ள பீகார் மக்கள் இந்த மோசமான ஆட்சியை இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Prashant Kishor Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe