prasant kishor

தேர்தல் வியூகநிபுணரான பிரஷாந்த்கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத்தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து வருகிறார். ஐந்து மாநிலசட்டப்பேரவை தேர்தல் நடைபெறப்போகும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜியின் திரிணமூல்காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூகவகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்தநிலையில் பஞ்சாப்மாநிலஆளுங்கட்சியான காங்கிரசோடு பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளார். அடுத்தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர்அமரீந்தர் சிங்கின்ஆலோசகராக பிரசாந்த்கிஷோர்நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர்அமரீந்தர் சிங்,பிரசாந்த் கிஷோர்,எனது முதன்மை ஆலோசகராக இணைந்துள்ளார். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் பஞ்சாபில்நடந்தஉள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் பெரும் வெற்றியைஈட்டியது குறிப்பிடத்தக்கது.