சமீபத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதற்கு பாஜக ஆட்சிதான் காரணம் என்று பாஜகவினர் கூறி வந்தனர்.

Advertisment

pranab muherjee

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களாக முன்னேறுவதற்கு முந்தைய அரசுகள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியவர், வரும் 2024ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசுகளே காரணம். பொருளாதார உயர்வுக்கு பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டவர், சுதந்திரத்துக்கு பிறகு இந்தியர்களே முன்னேற்றத்தைக் கொடுத்ததாகவும் கூறினார்.

Advertisment

காங்கிரசின் 55 ஆண்டுகால ஆட்சியை விமர்சிப்பவர்கள், நாம் முந்தைய நாட்களில் எங்கிருந்தோம், தற்போது எங்கு இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசுவதாகவும், நாம் தற்போது எந்தளவுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் பிரணாப் கூறினார்.

மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் மற்ற தலைவர்கள் இஸ்ரோ, ஐஐடி, வங்கிகள் போன்றவற்றை அமைத்ததாகவும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு இவைகள் முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.