Advertisment

என் முகத்தில் பளார் என்று விழுந்த அறை... பிரகாஷ்ராஜ் விரக்தி...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பாஜக வுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டார்.

Advertisment

prakashraj tweet about loksabha elections

இந்நிலையில் வாக்குபதிவில் மூன்றாம் இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்துள்ளது. என்னை குறிவைத்து ஏராளனமான வெறுப்புணர்வு கருத்துக்களும், நகைப்புகளும் வந்துகொண்டு உள்ளன. நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். கடினமான பயணம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. எனது இதுவரையிலான இந்த பயணத்திற்கு துணை நின்றவர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

loksabha election2019 Prakashraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe