பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் பிரக்யா தாகூர் சில நாட்களுக்கு முன்னர், மாட்டின் சிறுநீர் தான் தனது புற்றுநோயை குணப்படுத்தியது என தெரிவித்திருந்தார். தனக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாகவும், மாட்டின் சிறுநீர் பயன்படுத்தியதால் அதன் மருத்துவ குணத்தால் புற்றுநோய் சரியானதாகவும் தெரிவித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத், "பிரக்யா கடந்த 2008 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில், பிறகு 2017 ஆம் ஆண்டு மூன்றாவது அறுவை சிகிச்சை நடந்த போது அவரின் மார்பகங்கள் நீக்கப்பட்டன" என தெரிவித்தார்.