Advertisment

திடீர் உடல்நலக் கோளாறு - தனி விமானத்தில் விரைந்த பிரக்யா தாகூர்!

pragya thakur

Advertisment

பாரதிய ஜனதா கட்சியின்எம்.பி. பிரக்யா தாகூர். இவர், மலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருபவர். இவர்மத்தியப் பிரதேசத்தின்போபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

இவருக்கு, இன்று திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்சிகிச்சைக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மும்பைக்குத் தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

பிரக்யா தாகூர் ஏற்கனவே கடந்த மாதம், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர்அனுமதிக்கப்பட்டதாகஅப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Mumbai bhopal Pragya Singh Thakur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe