கோட்ஸே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜகவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மவுனவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

pragya thakur announces silent fasting

கோட்சே ஓர் உண்மையான தேசபக்தர் என பிரக்யா கடந்த வாரம் தெரிவித்தது மிகப்பெரிய சர்ச்சையானது. பாஜக வும், மோடியுமே அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து தனது கருத்தை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

Advertisment

இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இது சுய பரிசோதனைக்கான நேரம். நான் கூறிய கருத்துக்கள் தேசத்தின் உணர்வை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். அதுக்கு பிராயசித்தமாக தேர்தல் முடிவுகள் வரும் வரை 3 நாட்கள் மவுன விரதம் மேற்கொள்ளப்போகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.