Advertisment

தன்னை எதிர்த்து கோஷமிட்டவர்களை கடுமையாக விமர்சித்த பிரக்யா தாகூர்...

கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்திக்க சென்ற பாஜக எம்.பி பிரக்யா தாகூரை மாணவர்கள் முற்றுகையிட்டு "பயங்கரவாதியே திரும்ப போ" என கோஷமிட்ட நிகழ்வு குறித்து பிரக்யா தாகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Advertisment

pragya thakur about bhopal college incident

மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள மகன்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாஜக எம்.பி பிரக்யா தாகூரை அங்கிருந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் "பயங்கரவாதியை திரும்ப போ" என கோஷமும் எழுப்பினர். பிரக்யா உடன் வந்திருந்த பாஜகவினர் மாணவர்களின் இந்த கோஷத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிரக்யா அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யா, "என்னை பயங்கரவாதி என்றவர்கள் தேசத்துரோகிகள். போராட்டம் நடத்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தவில்லை. இந்த முற்றுகையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Pragya Singh Thakur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe