Advertisment

கோமியம் குடித்ததால் கரோனா வராது என்ற பாஜக எம்.பிக்கு கரோனா

pragya singh thakur

இந்தியாவில் கரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முதல் மாநில எம்.எல்.ஏக்கள் வரை கரோனா குறித்தும், அதை விரட்டுவது குறித்தும் மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்தனர்.

Advertisment

அந்த வகையில் பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர், "நாம் தினமும் கோமியத்தைக் குடித்தால், அது கரோனாவினால் ஏற்படும் நுரையீரல் தொற்றைக் குணப்படுத்தும். நான் மிகவும் வலியில் உள்ளேன், இருப்பினும் நான் தினமும் கோமியத்தைக் குடிக்கிறேன். அதனால் இப்போது, கரோனாவிற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. எனக்கு கரோனாவும் இல்லை" எனத் தெரிவித்தார். இது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.

Advertisment

இந்தநிலையில், தற்போது பிரக்யா தாக்கூருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

pandemic
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe