மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி என பாஜகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தது குறித்து அக்கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாகூர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

pragya singh thakur about continuous demises of bjp leaders

மறைந்த அருண் ஜேட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர், "தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம், இது மிகவும் மோசமான நேரம். பாஜகவுக்கு எதிராகவும், உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். நான் அதன் பிறகு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர்’’ எனக் கூறினார்.