9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நடன பயிற்சியின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள டி கொல்லஹள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளியின் மாணவிகள் நடன பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள்.
நடன பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போதே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் அவரை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்கள். மாணவியை சோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.