கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மரப்பாலம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக புதுச்சேரி நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.