ADVERTISEMENT

பேசிக்கொண்டிருக்கும்போதே மின்வெட்டு; குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சியில் பரபரப்பு

10:30 PM May 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக்கொண்டிருக்கும்போது 8 நிமிடங்களுக்கு மின் தடை ஏற்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரிபாதாவில் மஹாராஜ ஸ்ரீராம் சந்திர பஞ்சா தியோ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மின் தடை ஏற்பட்டது.

மின் தடை ஏற்பட்டாலும் திரௌபதி முர்மு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். சரியாக 11.56க்கு ஏற்பட்ட மின்தடை 12.05 வரை நீடித்தது. ஜெனரேட்டர்களும் வேலை செய்யாததால் மின்தடை சுமார் 9 நிமிடங்கள் வரை நீடித்தது. தொடர்ந்து பேசிய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மின் தடை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரீசியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பேசிக்கொண்டு இருந்தபோதே 8 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தீபக் மிஸ்ரா என்பவர், “திருமணம் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மின்தடை ஏற்பட்டால் சில நொடிகளில் மின்சாரம் சீராகிவிடும். ஆனால் இங்கு இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்திய குடியரசுத் தலைவர் 10 நிமிடங்களுக்கு மேல் இருளில் இருக்க வேண்டியுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவருக்குக் கூட தடையில்லா மின்சாரம் வழங்க முடியாது என்றால், சாதாரண மக்களுக்கும் எப்படி வழங்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT