Power belongs to Ajith Pawar; Election Commission decision

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத்தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அஜித் பவார் தலைமையிலான கட்சியேஉண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத்தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிவசேனாவிலிருந்துபிரிந்து சென்ற ஷிண்டே பாஜக கூட்டணியில் சேர்ந்த பின்ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகத்தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரத்பவார் அணி தங்கள் கட்சிக்கு புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.