வெங்காயத்தை அடுத்து ரேஸில் நிற்கும் உருளைக்கிழங்கு...!!

வெங்காய தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது.

கொல்கத்தாவில் மட்டும் உருளைக்கிழங்கின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 32 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Potatoes in the race after the onion ... !! price hike

கடந்த ஆண்டு இதே காலத்தில் டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 18 ரூபாயாக இருந்தது. டெல்லி மட்டுமல்லாது நாட்டின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் முதல் தரம் கொண்ட உருளைக்கிழங்கு 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு அதிகம் பயிரிடப்படும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் மாநிலங்களில் பருவம் மாறி அக்டோபரில் மழை பெய்ததேஉருளைக்கிழங்கு தட்டுப்பாட்டிற்கும், விலை அதிகரிப்புக்கும்முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. வெங்காயத்தை அடுத்து தற்பொழுது உருளைக்கிழங்கின் விலையும்அதிகரித்துள்ளது.

Chennai Mumbai onion onion price hike
இதையும் படியுங்கள்
Subscribe