எதிர்க்கட்சி தலைவரை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5100 ரூபாய் பரிசாக தரப்படும் என பீகார் தெருகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
வெயில் கொடுமையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு, மூளைஅழற்சியால் 110 குழந்தைகள் மரணம் என பீகார் முழுவதும் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் நிலையில், அது குறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் எந்த கருத்தும் கூறவில்லை. ஆளும் கட்சிக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக பீகாரின் முசாபர்பூர் பகுதி முழுவதும் எதிர்க்கட்சி தலைவரை கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.