தபால் துறைக்கு நடத்தப்படும் தேர்வுகளில் இனி ஆங்கிலம் மற்றும், இந்தி மட்டுமே இடம்பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

postal exams to be conducted only in english and hindi

தபால்துறைக்கானநாடு முழுவதும் உள்ளபல்வேறு பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். இதில் இந்தி, ஆங்கிலம் தவிர, அந்தந்த மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் இருக்கும்.

இந்நிலையில் இனி தபால்துறை தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் எனவும், இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisment

ஏற்கனவே தமிழ் தேர்வுகளில் ஹரியானா உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றது சர்ச்சையான நிலையில், தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.