popular frond of india office nia raid kerala  bandh

Advertisment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர். தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆட்டோக்களும், பேருந்துகளும் வெகு சில இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டன. கோழிக்கோட்டில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்கினர்.

popular frond of india office nia raid kerala  bandh

Advertisment

கோட்டயத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். கொச்சியில் முக்கிய சாலையில் திரண்ட அந்த அமைப்பினர் என்.ஐ.ஏ. சோதனைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனிடையே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கடையடைப்பு போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், பொது சொத்துக்கு சேதம் ஏற்படாத படி காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.