Advertisment

கர்நாடகாவின் சபாநாயகர் ஆகிறார் போபையா- காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு திடீர்அரசியல் மாற்றங்கள் அங்குநடந்துவருகிறன. பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவை பதவிவகிக்கஆளுநர் அழைப்பு விடுத்ததோடு மட்டுமல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கெடுவும் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பதவியேற்றார். ஆளுநர் பதவிக்கு அழைப்புவிடுத்த விவகாரத்தில் காங்கிரஸ்-மஜக தொடுத்த வழக்கில் நாளை நான்கு மணிக்குள் பாஜக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

pjp

இதை தொடர்ந்துதற்போது கர்நாடக சட்டபேரவையின் இடக்கைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். போபையா 2010-ஆண்டு எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபொழுது ஊழல் வழக்கில் அவருக்கு எதிராக போர்கொடிதூக்கிய எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பாஜக எம்.எல்.ஏ போபையாவை இடைக்கால சபாநாயகராக ஆளுநர் நியமித்தற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் போபையா நியமனத்தை எதிர்த்து நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருப்பதாக அபிஷேக் சிங்கவி தெரிவித்துள்ளார்.

elections karnataka ediyurappa pjp congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe