Advertisment

பாப் பாடகருக்கு இரண்டாண்டு சிறை! 

பஞ்சாப் பாப் பாடகர்தலெர் மெஹந்திக்குஇரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துபாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

daler mehendi

தன் இசைக்குழுவுடன் அமெரிக்கா செல்வதாக கூறி, வேறு சிலருக்கும் விசா வாங்கி சட்டவிரோதமாகஅமெரிக்கா கூட்டிச்சென்றதற்காககடந்த 2003ஆம் ஆண்டுவழக்கு தொடரப்பட்டது. அவரும் அவரது சகோதரர் சம்ஸர் சிங்கும் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சென்று படல் நிகழ்ச்சிகள் நடத்த சென்றிருக்கின்றனர். அவர்களுடன் சென்றவர்களில்பத்து பேர் அங்கேயே விடப்பட்டு வந்திருக்கின்றனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.பின்னர்,பாட்டியாலா காவல்துறை வழக்குபதிவு செய்து இப்பிரச்சனையயை பற்றி விசாரிக்க ஆரம்பித்தது. சாட்சிகள் அனைத்தும் வலுவாக இருக்க, நேற்று (16 மார்ச்)இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலெர் மெஹந்தி, உடனடியாக பெயிலும் வாங்கியிருக்கிறார். வெளியே வந்தவர், "நான் மீண்டும் இந்த வழக்கில்மேல்முறையீடு செய்யவுள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.

Advertisment
kamalhassan hindi dalermehendi popsinger
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe