Skip to main content

தடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

பூர்வா என்னும் விரைவு ரயில் ஹவ்ராவிலிருந்து புது டெல்லிக்கு இயக்கப்படுகிறது. பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்ட ரயில் அதிகாலை 1 மணியளவில் ரூமா என்ற கிராமம் வழியாக செல்லும்போது தண்டாவளத்தில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 

poorva train

 

 

இந்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் ஸ்மிதா வட்ஸ் சர்மா, “காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ உபகரணங்களுடன் விபத்து மீட்பு ரயில் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
 

இந்த விபத்தின் காரணமாக கிழக்கு பகுதியிலிருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரயில் பயணிகள் பேருந்து மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் கான்பூரில் இருந்து டெல்லிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Governor R.N. Ravi's trip to Delhi

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் நாளை அமைச்சராக பொன்முடி பதவியேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

Governor R.N. Ravi's trip to Delhi

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி நாளை பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.