பாஜக கட்சி சார்பாக எம்.பி யாக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா இரு வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவரது மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சத்ருகன் சின்ஹா பாஜக சார்பில் பாட்னா சாஹிப் தொகுதியில் எம்.பி யாக இருந்தார். அப்போது முதலே பாஜக -வின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மனைவி இன்று அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பாக அவர் லக்னோ தொகுதியில் பாஜக -வின் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி அவர் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.