Advertisment

நித்திக்கு உதவிய பெண் தொழிலதிபர் மீது வழக்கு!

தனிநாடு அறிவிப்பின் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தலைமறைவு குற்றவாளி நித்தியானந்தா. நித்தியானந்தாவுக்கு சகல உதவிகளையும் செய்து வந்த பெண் தொழிலதிபர் தற்போது போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் வந்திருக்கிறார்.

Advertisment

p

குஜராத்தில் கலோரெக்ஸ் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மஞ்சுளா பூஜா ஷெராப், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தபோது பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பிற்கு பின்னர் நித்தியானந்தாவின் தீவிர பக்தை ஆகிவிட்டார் மஞ்சுளா. இதை பயன்படுத்திக்கொண்ட நித்தியானந்தா, அகமதாபாத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று சொல்ல, மஞ்சுளாவும் தனது பள்ளி வளாகத்திலேயே ஆசிரமம் அமைத்துக்கொடுத்திருக்கிறார். பிடதி ஆசிரமத்தில் சர்ச்சைகள் ஆரம்பித்தபோது அங்கிருந்து வெளியேறிய நித்தியானந்தா இந்த அகமதாபாத் ஆசிரமத்தில்தான் இருந்ததாகவும், ஜனார்த்த சர்மாமவின் மூலம் பிரச்சனை பெரிதானதால், அந்த ஆசிரமத்தில் இருந்தும் வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

p

Advertisment

ஆசிரமத்திற்கு இடம் கொடுத்ததோடு அல்லாமல், நித்தியானந்தா கைலாசா எனும் தனி நாடு உருவாக்குவதற்கும் பலகோடிகள் நிதியுதவி செய்துள்ளாராம் மஞ்சுளா.

நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாகிவிட்ட நிலையில், அகமதாபாத்தில் ஆசிரமத்திற்கு வழங்கிய இடம் சட்டத்திற்கு புறம்பான இடம் என்று குஜராத் போலீசார் மஞ்சுளா வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் நித்தியானந்தா குறித்து அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்த வழக்கில் மஞ்சுளா முன் ஜாமீன் பெற்றுவிட்டாலும், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கியுள்ளனர்.

nithyananda
இதையும் படியுங்கள்
Subscribe