puducherry narayanasamy

Advertisment

புதுச்சேரி மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (பச்சரிசி 1 கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசிப்பருப்பு அரை கிலோ, முந்திரி 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் வாங்க)அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.200 செலுத்தப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1,48,893 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "1.50 லட்சம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்த, ஒப்புதல் தரப்பட்டது. இது 3 மாதங்களுக்கான இலவச அரிசிக்கான பணமாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.