புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

p

அதையடுத்து துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று முன்நாள் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சார்பில், யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.