புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ளது தனியார் (வேலு) ஒயின்ஸ் என்கிற மதுபான கடை. இந்த கடை நேற்று இரவு 10.00 மணிக்கு மூடப்பட்டு இன்று (26/09/2019) காலை வழக்கம்போல் 10.00 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது கல்லாப்பெட்டி திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்த ஊழியர் சோதனை செய்தபோது, அதில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisment

pondicherry thief entry one wine shop  Robbery money and wines

அதை தொடர்ந்து மது பாட்டில்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மது பாட்டில்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேசமயம் கடை பீரோவில் இருந்த 2 லட்சம் பணம் கொள்ளை அடிக்காமல் தப்பியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment