Advertisment

நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடிகள்! போலீசார் விசாரணை..!

Pondicherry Othiyanchalai Issue police investigation

Advertisment

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்குப்பட்ட வாணரப்பேட்டை காளியம்மன் தோப்பு பகுதியில் உப்பனாற்றைக்கடந்து செல்லும் ரயில் பாதை உள்ளது. இந்தப் பாதை அருகில் நேற்று (05.07.2021) இரவு பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தபோது புகை மூட்டமாக இருந்தது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு வெடித்த பகுதியைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர், தாங்கள் தயாரித்த நாட்டு வெடிகுண்டு சரியாக வெடிக்கிறதா என சோதனை செய்து பார்த்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சில ரவுடிகளை நள்ளிரவில் போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டை வீசி சோதனை செய்தவர்கள் யார், எதற்காக இதனைத் தயாரித்தனர் உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe