we want to exam on online ... College students struggle

கோப்புப்படம்

Advertisment

புதுச்சேரியில் ஆன்லைனில் தேர்வுகளை வைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 16ஆம் தேதி முதல் நேரடி பருவத் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியில் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்த நிலையில் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துமாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில் காவல்துறையினரும், அந்தப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மாணவர்கள் விலகிச் சென்றனர்.