Skip to main content

தனி மாநில அந்தஸ்து கோரியும், கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்ப்பாட்டம்,

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

pp

 

நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மாநிலத்திற்கு போதுமான நிதியினை அளிக்காமல் வஞ்சிக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகார வரம்பு மீறுகிறார். எனவே புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மாநில வளர்ச்சிக்கு  தடையாக செயல்படும் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுச்சேரி அரசியல் கட்சிகள் சார்பாக டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த  அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

 

போராட்டத்தில் பங்கேற்கும்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  ஆளும் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்பட 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 380 பேர், காரைக்காலில் இருந்து 40 பேர் என மொத்தம் 420 பேர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.  டெல்லி சென்றவர்களை தலைவர்கள் வரவேற்று பேருந்துகள் மூலம் விடுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

 

பின்னர் நேற்று  காலை 11 மணிக்கு தொண்டர்கள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்  நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக கபிரியேல், மற்று கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள்  முன்னிலை வகித்தனர்.

 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய்தத், குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீத்தாராம்யெச்சூரி, டி.கே.ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தியும், கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 

புதுச்சேரி அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், கந்தசாமி, எம்.எல்.ஏக்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனவேலு, தீப்பாய்ந்தான், பாலன், டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், இந்த போராட்டத்தில் புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.