ADVERTISEMENT

2வது நாளாக போராட்டம் நீடிப்பு - 3 அடுக்கு பாதுகாப்பு

07:44 AM Feb 14, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளூநர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஆளுநர் கிரண்பெடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. ஆளுநரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கருப்பு வேட்டி, சட்டை அணிந்து விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT