Skip to main content

போலிசாா் தடுத்ததால் அரசு பேருந்தில் ஏறி இருமுடி கட்டுடன் பம்பைக்கு சென்ற பொன் ராதாகிருஷ்ணன்!!

Published on 21/11/2018 | Edited on 21/11/2018

            

இருமுடி கட்டி கொண்டு நேற்று இரவு மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் சபாிமலைக்கு புறப்பட்டு சென்றாா். இன்று காலை 10.30 மணிக்கு நிலக்கல் வந்த பொன் ராதாகிருஷ்ணன் கேரளா பா.ஜ.க பொதுச்செயலாளா் ஏ.என். ராதாகிருஷ்ணனோடு  நிலக்கல்லில்  பக்தா்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அங்கு இருந்த பக்தா்களிடம் கேட்டாா்.

 

          

pon

 

அப்போது பக்தா்கள் கழிவறை மற்றும் இருப்பிட வசதிகள் சாியான முறையில் இல்லையென்று குற்றம் சாட்டினாா்கள். மேலும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என்பதால் அவா்களின் விருப்பத்திற்கு ஏற்றாா் போல் பேருந்துகளை இயக்குவதால் கஷ்டமான சூழ்நிலை இருப்பதாக குற்றம் சாட்டினாா்கள். 

 

             

இதையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பொறுப்பேற்கும் காவல் கண்காணிப்பாளா் யாதீஷ் சந்திராவிடம் இது பற்றி வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா். அதற்கு எஸ்.பி யாதீஷ் சந்திரா மாநில மற்றும் மத்திய மந்திாிகளின் வாகனங்களை தவிர எந்த தனியாா் வாகனங்களுக்கும் பம்பைக்கு அனுமதி இல்லை என்று கூறியாதால் ஆத்திரமடைந்த பொன் ராதாகிருஷ்ணன் கேரளா அரசு மற்றும் தேவசம் போா்டு மீது குற்றச்சாட்டுகளை கூறினாா்.

 

             

இந்த நிலையில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அவருடைய வாகனத்துடன் அவருடன் சென்ற குமாி மாவட்ட பா.ஜ.க தலைவா் முத்துகிருஷ்ணன், முன்னாள் பா.ஜ.க பேருராட்சி தலைவா்கள் முருகேஷ் (சுசிந்திரம்), ஜெயசீலன் (உண்ணாமலைக்கடை) ஆகியோா் வந்த வாகனத்தையும்  அனுமதிக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் எஸ்.பி.யிடம் கூறினாா். அதற்கு எஸ்.பி. முடியாது என்றதால் கோபத்துடன் பொன் ராதாகிருஷ்ணன் மற்ற பக்தா்களோடு சோ்ந்து கேரளா அரசு பேருந்தில் ஏறி பம்பைக்கு புறப்பட்டாா்.

 

 

சார்ந்த செய்திகள்