Pollution Control Board says Haridwar Ganga water not fit for drinking

ஹரித்வாரில் உள்ள கங்கை நதி நீர் குடிப்பதற்கு பாதுக்காப்பற்ற நிலையில் உள்ளதாக உத்தரகாண்ட் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

உத்தரபிரதேச எல்லையில் அருகே ஹரித்வாரைச் சுற்றியுள்ள சுமார் 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனையை ஒவ்வொரு மாதமும் உத்தரகாண்ட் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தி வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான நடத்தப்பட்ட சோதனையில் கங்கை நதி நீர் ‘பி’ வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி நீர் குடிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உத்தரகாண்ட் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி ராஜேந்திர சிங், “மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீரின் தரத்தை 5 வகைகளாகப் பிரித்துள்ளது. நான்கு அளவுருக்கள் (pH, கரைந்த ஆக்ஸிஜன், உயிரியல் ஆக்ஸிஜன் மற்றும் மொத்த கோலிஃபார்ம் பாக்டீரியா) அடிப்படையில், கங்கையின் தரம் ‘பி’ பிரிவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்றது. ஆனால், இந்த நீரை குடிப்பதற்கு உகந்தது அல்ல” என்று தெரிவித்தார்.

நதி நீர், ‘ஏ’ முதல் ‘ஈ’ வரை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ‘ஏ’ மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அதாவது கிருமி நீக்கம் செய்த பிறகு தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்தலாம். ‘ஈ’ என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

Advertisment