Skip to main content

போலியோ சொட்டு மருத்து விலை ஏற்றம்...

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
polio

 

நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், போலியோ சொட்டு மருந்து விலை ரூ. 95ல் இருந்து ரூ. 172ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது போலியோ சொட்டு மருந்து வாங்க ரூ.172.59க்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்... அதிர்ச்சியை ஏற்படுத்திய அலட்சியம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

 Sanitizer in response to polio drops ... shocking negligence!

 

போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கின் என்பவரின் நினைவைப் போற்றும் வண்ணம் 'உலக போலியோ தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சற்று தாமதமாகவே ஏற்பாடு செய்யப்பட்டன.

 

 Sanitizer in response to polio drops ... shocking negligence!

 

அதன்படி தமிழகத்தில்கூட கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 

மகாராஷ்டிரா மாநிலம் எக்மால் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (01.02.2021) போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்துக்குப் பதிலாக  சானிடைசர் கொடுக்கப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Next Story

தமிழகத்தில் தொடங்கியது 'போலியோ சொட்டு மருந்து முகாம்'

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

தமிழகத்தில் 'போலியோ சொட்டு மருந்து முகாம்' இன்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 43,051 மையங்களில் இன்றைய தினம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.

 

சென்னை பசுமைவழிசாலையில் உள்ள இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். இன்று மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.