Skip to main content

போலியோ சொட்டு மருந்து வாங்க 100 கோடி கடன் கேட்கும் மோடி அரசு!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

பணம் இல்லாததால் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொள்முதல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது. உடனே சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

 

polio drops

 

இந்நிலையில்தான், போலியோ தடுப்பு மருந்து வாங்குவதற்காக சர்வதேச அமைப்பிடம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 100 கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கும் செய்தி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏழை நாடுகளில் நோய் தடுப்பு திட்டங்களுக்காக உதவும் சர்வதேச அமைப்பான, குளோபல் வேசின் அல்லையன்ஸ் என்ற நிறுவனத்திடம்தான் மத்திய அரசு இந்த உதவியைக் கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி சவ்பே தெரிவித்தார்.

 

2016 ஆம் ஆண்டிலிருந்து போலியோ தடுப்பு மருந்தின் விலை 80 சதவீதம் அதிகரித்திருப்பதால், இந்தியாவின் ஒரு ஆண்டுத் தேவையில் 50 சதவீதம் அளவுக்கு உதவி செய்யும்படி கேட்டிருப்பதாக மக்களவையில் அமைச்சர் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த தகவல் மத்திய அரசின் நிதி நிலையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்