The policeman cried tears with a plate of food on the road!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கையில் உணவுத் தட்டுடன் காவலர் ஒருவர் கதறி அழுத வீடியோ கண்கலங்க செய்துள்ளது.

Advertisment

தலைமை காவலரான மனோஜ் குமார் என்பவர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இந்த செயலில் ஈடுபட்டார்.தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்ணீர் மல்க கதறினார்.

Advertisment

அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், அரிசி சாதமும், பருப்பும் இருந்தன. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள்; ஆனால் அதற்கு ஏற்ற உணவு வழங்கவில்லை என அந்த காவலர் வேதனை தெரிவித்தார்.