Published on 15/09/2018 | Edited on 15/09/2018

நேற்று மதுராவில் வலியில் துடித்துகொண்டிருந்த கர்பிணி பெண்ணை கையால் துக்கிகொண்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸ் அதிகாரி. இச்சம்பவம் குறித்து பேட்டியளித்த போலீஸ் அதிகாரி,” கர்பிணி பெண்ணின் கணவர் சாலையில் மருத்துவமனைக்கு அழைத்துபோக உதவி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், யாரும் உதவி செய்ய முன்வருவதாக இல்லை. நானோ ஆம்புலன்ஸுக்கு அழைத்தேன், அதுவும் இல்லை என்பதால் நானே அவரை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றேன், அவருக்கு அங்கு குழந்தையும் பிறந்தது” என்றார்.